கேப்டன் விஜயகாந்த் மறைவு.. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் இரங்கல்.

December 29, 2023 at 8:58 am
pc

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விக்ரம், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்வில், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

குஷ்பு: ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம். தங்க இதயம் கொண்ட மனிதர். உண்மையில் இன்னும் நிறைய சாதனை செய்ய தகுதியுள்ள ஒரு மனிதர். எங்கள் அன்புக்குரிய கேப்டன், எங்கள் விஜயகாந்த். ஐயா, நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி

புதுவை கவர்னர் தமிழிசை செளந்திரராஜன்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,ச கோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.

நல்ல திரைப்படக் கலைஞர்….

நல்ல அரசியல் தலைவர்….
நல்ல மனிதர்….
நல்ல சகோதரர்….
ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நடிகர் விக்ரம்: மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை இழந்துவிட்டோம் கேப்டன்!!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website