கொசுக்களின் வாழ்நாள் அதிகரிப்பு ..வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்-சென்னை மக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கடும் குளிர் காரணமாக கொசுக்களின் வாழ்நாள் அதிகரிப்பு ..வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிர் காரணமாக கொசுக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. இதனால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .தட்பவெப்பநிலை மாற்றத்தால் கொசுக்களின் மூலம் வேகமாக வைரஸ் காய்ச்சல்,டெங்கு,எலி காய்ச்சல் ,சளி,தொண்டை வலி ,போன்றவை பரவி கொண்டிருக்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்த டோர்ன் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது .எனவே குழந்தைகள் ,பெரியவ்ர்கள் ,இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் .மேலும் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் .தாமாக சென்று மருந்தகங்களில் பாராசிட்டாமல் மாத்திரைகளை போடா கூடாது .சென்னை மற்றும் புறநகர் பகுதில் உள்ள மக்கள் பாதிப்புகள் இருந்தால் சுய தனிமை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .மக்கள் ஆரோக்கியமான காய்கறிகள்,பழங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.தூய்மையான தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் .