கொடூரம் ! ‘வெறியான மருமகள்’ தலையுடன் 6 தையலுடன் மாமியார்..

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மின் நகர் பகுதியில் நாகேஸ்வரி என்ற 62 வயதான குடும்பத்தலைவி இருந்தார். இவருக்கு ஓர் ஆண்மகன் இருந்துள்ளார். அவர் பெயர் சரவணகுமார் 38 வயதானவர் இவர். கடந்த 13 வருடங்களாக சின்னாப்பாளையத்தில் உள்ள கல்பனா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் திருமணம் ஆகிய பிறகும் குடிப்பழக்கம் விடவிலை. இதனால் அடிக்கடி அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி இடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சகித்துகொள்ள முடியாமல்போனதால் கல்பனா நீண்ட தகராறிலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சரவணகுமார் தன் தயார் வீட்டுற்கு மின் நகர்க்கு வந்துவிட்டார்.
பிறகு மாமியார் வீட்டுற்கு வந்து தகராறில் ஈட்பட்டுள்ளார் கல்பனா. கடந்த ஜனவரி மாதம் அன்று மாமியார் மருமகள் பிரச்சனை தொடங்கியது. இதனால் மாமியனரான நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை வாபஸ் செய்யுமாறு கல்பனா மிரட்டியுள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடந்த சனிகிழமை அன்று வழக்கம்போல் மாமியார் மருமகள் தகராறு தொடங்கியுள்ளது. இதில் கல்பனா தன் மாமியாரை தாக்கி பல்லால் தலையைக்கடித்து காயப்படுத்தினர். மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லபட்ட அவர்க்கு 6 தையல் போடப்பட்டது என மருத்துவர் தெரிவித்தார். இதனை அறிந்தஎ பொலிசார் கல்பனாவை கைதுசெய்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது .