கோவாவில் அதிர்ச்சி தகவல் !! “நான் தான் என் மனைவியை உயிருடன் புதைத்தேன் ” கணவர் வாக்கு மூலம்..

சிகிசைக்கு பணமில்லாத காரணத்தினால் தனது மனைவியை உயிருடன் புதைத்த கணவர் .
கோவாவில் துக்காராம் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார் .துக்காராம் ஒரு கூலித்தொழிலாலளி மிகவும் ஏழ்மையான குடும்பம் . அவரது மனைவிக்கு நீண்ட நாட்களாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளது இவரும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளதால் மருத்துவ செலவுகளுக்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார் . இந்நிலையில் கடந்த சில நாட்களாக துக்காராமின் வீட்டில் அவரது மனைவி இல்லாததை அக்கம்பக்கத்தினர் கவனித்துள்ளனர் . இந்த தகவலை அவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துக்காராமை விசாரித்துள்ளனர் .
அப்போது அவர் , எனது
மனைவிக்கு பல நாட்களாக உடல்நிலை சரியில்லை ,அவரது மருத்துவ செலவுகளுக்கு
என்னிடம் போதைய பணம் இல்லாத காரணத்தால் ,எனது மனைவியை நீர்ப்பாசன
கால்வாயின் அருகில் உயிருடன் புதைத்து விட்டேன் என வாக்கு மூலம்
அளித்துள்ளார் .ஏழ்மை காரணமாக தனது மனைவியையே உயிருடன் புதைத்த இந்த
சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.