சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் ஏன் செட் ஆகல தெரியுமா??? மனம் திறந்த சமந்தா…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன் முதலில் அதர்வ நடித்து வெளிவந்த பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக பிரபலமானார்.
மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் மனதை கட்டிபோட்டுள்ளார் என்று தான் கூறவேண்டும்.
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஜானு திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
நடிகை சமந்தா கடைசியாக தமிழில் நடித்து படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் deluxe. இப்படத்திற்கு பிறகு தற்போது தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தில் முதன் முறையாக லேடி சூப்பர் நயன்தாராவுடன் இணைந்து நடித்து போகிறார் நடிகை சமந்தா.
இந்நிலையில் தனது முன்னாள் காதலனை பற்றி நடிகை சமந்தா தற்போது மனம் திறந்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம் அதில் அவர் கூறியது “நானும் நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவை போல் குழியில் விழ இருந்தேன். ஆனால் அதனை நான் தவறு என்று புரிந்து கொண்டு அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டேன்”.
மேலும் “நாகசைத்தன்யா போல் ஒரு நல்ல மனிதர் எனது வாழ்க்கை துணையாக கிடைக்க நான் தான் புன்னியம் செய்திருக்க வேண்டும்” என்று கூறி, நடிகர் சித்தார்த்துடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான காதல் முறிவை பற்றி நடிகை சமந்தா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.