‘சமந்தா’ எல்லா இயக்குனர்களின் பஸ்ட் சாய்ஸ்..படம் எடுக்க ஆர்வம் உள்ளதாக கூறிய இயக்குநர் சுசீந்திரன்.
தமிழ் திரையுலகில் குறுகிய காலா கட்டத்தில் பலரை தன் பக்கம் வசப்படுத்திகொண்ட இயக்குநர்களில் ஒருவர் சுசீந்திரன் ஆவர். இவர் இயற்கையாகவே விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளதால் அனைத்து திரைப்படத்தையும் விளையாட்டை முதன்மைபடுத்தியும் மையப்படுத்தியும் வருகிறார். தற்போது இவர் ” சாம்பியன் ” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்த படம் 14 வது ஆகும்.
இதைப் பற்றி கூறிய அவர் வட சென்னை பகுதியை சுற்றி இத்திரைப்படம் எடுத்துள்ளதால் மறுபக்கமான வட சென்னை மக்களை காண்பீர்கள் என்றார் மகிழ்ச்சியாக உரைத்தார். அங்கேயும் விளையாட்டு சாம்பியன்ஸ் உள்ளார் என்பதும் எவ்வாறு அவர்கள் வேறு வழியில் திசைமாறி செல்கிறார்கள் என்பதும் இத்திரைப்படத்தின் திரைக்கதை ஆகும் என்று தெரிவித்தார்.
இதில் நடிகர் விஷ்வா கதாநாயகனாக நடிக்கபோகிறார் என்ற உண்மை செய்தியையும் பிறகு அவருக்கும் மற்றும் திரைபடத்தில் நடிக்க போகும் மற்ற நடிகர்களுக்கும் ஒரு வருட கால்பந்து பயிற்சியானது தரப்பட்டது தகவலை தெரிவித்தார். பிறகு கதாநாயகிகளாக மிருணாளினி, சவும்யா ஆகிய இருவர் நடிக்க இருப்பதாக கூறினார்.பேட்டியில் இவருக்கு பெண் கதாபாத்திரத்தை முன்வைத்து திரைப்படம் எடுப்பீர்களா என்ற வினாவிற்கு அவர் 100% தமிழ் தெரியும் கதாநாயகியை கொண்டு திரைப்படம் எடுக்க ஆசை உள்ளதாக தெரிவித்தார். சமந்தா ,மிருணாளினி போன்றோர் தமிழ் நடிகைகள் தான் இவர்களை வைத்து படம் எடுக்க ஆர்வம் உள்ளதாக என கூறினார். மேலும் விரைவில் நடிகர் சூரியா அல்லது அவர் தம்பி கார்த்திகை வைத்து படம் எடுக்க போவதாக தெரிவித்தார் இயக்குனர் சுசீந்திரன்.