சமூகம் பெரிய பு***யோ?, விஜய் ரசிகரை விளாசிய பிக் பாஸ் காஸ்தூரி !!!
நீ பிக்பாஸ் போனியே என்ன கிழிச்சிட்ட என கேட்ட விஜய் ரசிகரை, வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் கஸ்தூரி, தற்போது படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இடையில் ஒரு படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைக்கு கருத்தை தெரிவித்து கொண்டே இருப்பார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் இல்லை, அதனால் ரசிகர்களால் வெளியே அனுப்பபட்டர். இவர் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்திய பேரணியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கலந்து கொள்ளாதது ஏன் என தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த ட்விட்டிற்கு விஜய் ரசிகர் ஒருவர், நீ பிக்பாஸ் போனியே அங்க என்ன கிழிச்சிட்ட என பதில் ட்விட் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கஸ்தூரி சமூகம் பெரிய பு***யோ ? என பதிலடி கொடுத்துள்ளார். பு****யோ? என்றவார்த்தைக்கு பல அசிங்கமாக பதில்கள் உள்ளன. ஒரு சாதாரண ரசிகர் கேள்வி கேட்டதற்க்கு பிரபல நடிகையான நீங்கள் இப்படி ஒரு மோசமான பதிலை சமூக வலைத்தளத்தில் அளிக்கலாமா என பலரும் அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர். இறுதியாக நீ என்ன பெரிய “புள்ளியோ” என முழு வார்த்தையை அனைவரின் வாயை அடைத்தார்.