சாலையில் சாக்கு பையில் கட்டியபடி இருந்த இளம் பெண்ணின் உடல் !! அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சாகியாபாத் என்னும் பகுதியில் சாலையோரம் சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேஸை சோதனை செய்தனர்.
சுமார் 30 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் உடல் இருந்ததைக் கண்டு போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் இறந்த பெண் யார் என்பது குறித்து சரியான தகவல் எதுவும் தெரிய வராத நிலையில், பெண்ணை அடையாளம் காணுவது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.