சாலையை சீரமைப்பதற்காக சேற்றில் படுத்து கோரிக்கை வைத்த பெண்!
சாலையை சீரமைப்பதற்காக சேறு நிறைந்த சாலையில் படுத்துக்கொண்டும், கும்பிட்டும் பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மழைக்காலத்தில் சாலையில் ஏற்படும் சேற்றால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை உணர்த்தும் வகையில் தான் பெண் ஒருவர் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டுள்ளார்.
இந்த பெண், பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் சேறு நிறைந்த சாலையில் படுத்துள்ளார். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், “சாலையை சீரமைக்க பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இவ்வாறு செய்தேன். கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததை உணர்த்துவதற்கான தனது கடைசி முயற்சி” என்றார்.