சித்தார்த் – அதிதி ராவ் திருமணம்: இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்..!
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பதும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’மகா சமுத்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்த போது அவருடன் இணைந்து நடித்தவர் தான் அதிதி ராவ் ஹைத்ரி.
அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அதன் பின்னர் இருவரும் காதலித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சித்தார்த் அதிதி ராவ் ஹைத்ரி நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சித்தார்த் – அதிதி ராவ் ஹைத்ரி திருமணம் இரு குடும்பத்தினர் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
இது குறித்த புகைப்படங்களை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.