சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய உதவி..
இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் என்ற இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக படப்பிடிப்பு மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனை மனதில் வைத்து பல முன்னணி நடிகர்களும் தங்களால் ஆன உதவியை செய்ய முன் வந்துள்ளனர். சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தன் சினிமா குடும்பத்தில் இருப்பவருக்கு மிகப்பெரும் உதவி செய்துள்ளார். கொரோனா காரணமாக வேலையிழந்துள்ள பெப்சி தொழிலாளர்களுக்காக சிவகார்த்திகேயன் ரூ 10 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார். இது அவர்களுக்கு கண்டிப்பாக இந்த நேரத்தில் பெரும் உதவி தான்.