சுற்றுலாக்கு சென்ற இடத்தில் வரலட்சுமி சரத்குமார் செய்த செயல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, போடா போடி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தாலும் அதற்கு முன்பே ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சில காரணங்களால் மிஸ் செய்துள்ளார். முதல் படமே அவருக்கு வெற்றிக்கொடுக்க அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்து தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணம் தாய்லாந்தில் மிக நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அதற்கு முன் சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி என பிரமாண்டமாக இந்த திருமணம் நடந்தது.
இந்நிலையில், அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று கொண்டிருக்கும் இந்த ஜோடி தற்போது மாஹே தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதில் ஒரு வீடியோவை பதிவிட்டு “மனைவி ஒரு நல்ல போட்டோ போடுவதற்கு பின்னால் கணவன் 100 போட்டோக்களையாவது எடுக்க வேண்டும் அப்போது தான் ஒரு புகைப்படமாவது அழகாக இருக்கும் என ஜாலியாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.