சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்த குக் வித் கோமாளி புகழ்.. ரஜினிகாந்த் செய்த சம்பவம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குகுமாருடன் இணைந்து ஜெயிலர் படத்தை கொடுத்திருந்த ரஜினிகாந்த், அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இளம் இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கைகோர்த்துவரும் ரஜினிகாந்த், பல இளம் இயக்குனர்களின் படங்களை பார்த்து அதை பாராட்டவும் தவறுவதில்லை. மேலும் கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் புகழை சந்தித்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் பல வெற்றி படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி உள்ளது. ரஜினிகாந்த் திரைப்படங்களை மற்றும் அதன் ரிலீஸ்யை திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் வெயிட்டிங். கடந்த சில தினங்களாகவே இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்டையன் படம்: அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்று வருகின்றன. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியாக உள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் புகழை சந்தித்த ரஜினிகாந்த்: இளம் இயக்குனர்களின் திறமைகளை மதித்து அவர்களுடன் இணைந்து வரும் ரஜினிகாந்த், இதேபோல இளம் இயக்குனர்களின் கைவண்ணத்தில் வெளியாகி வரும் படங்களை பார்த்துவிட்டு பாராட்டவும் தவறுவதில்லை. பலருக்கு தொலைபேசி மூலமாகவும் நேரில் அழைத்தும் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் பல நடிகர்கள் ரஜினியை சந்திக்கும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டிலேயே அவர்களை அழைத்து உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் அதிகமான கவனத்தைப் பெற்ற நடிகர் புகழை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
ரஜினிகாந்த் கொடுத்த பரிசுகள்: குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த புகழையடுத்து, அடுத்தடுத்த படங்களில் நடித்து சிறப்பான கவனத்தை ஏற்படுத்தி வருகிறார் புகழ். இந்நிலையில் அவர் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். அப்போது புகழுக்கு ரஜினிகாந்த் பாபா படத்தை பரிசாக கொடுத்ததை பார்க்க முடிந்தது. மேலும் புகழை கட்டியணைத்து அவருக்கு பாராட்டுக்களையும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்னும் சில தினங்களில் புகழின் மகளுக்கு பிறந்தநாள் வருவதையொட்டி அவருக்கு விலையுயர்ந்த சாக்லேட்டையும் ரஜினிகாந்த் கொடுத்துள்ளார். இதுகுறித்து புகழ் வீடியோ மூலம் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.