சூரியின் சினிமா வாழ்க்கையில் விளையாடும் கொரோனா.! இயக்குனர் வெற்றிமாறனின் திடீர் முடிவு…
வெற்றிமாறன் – சூரி கூட்டணி திரைப்படம் துவங்கியதிலிருந்தே பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இப்படம் மறைந்த தேசிய விருது பெற்ற கவிஞர் நா. முத்துகுமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகத்தைத் தழுவி படமாக்க திட்டமிடப்பட்டது, பின்னர் மீரான் மொய்தீனின் ‘அஜ்னபி’ நாவலைத் தேர்ந்தெடுத்தனர். இந்த கதையில் ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா என பல வெளிநாட்டு இடங்கள் இருந்தன, ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அடுத்த சில மாதங்களுக்கு எந்தவொரு விமான பயணத்தையும் ரத்து செய்துள்ள நிலையில், தற்போது மற்றொரு பெரிய மாற்றத்தை இந்த கூட்டணி திட்டம் பெற்றுள்ளது.
வெற்றிமாறனும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதனால் தற்போது புதிய கதைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவும் ஒரு நாவலைத் தழுவி இருக்குமா அல்லது வெற்றிமாறனின் சொந்த திரைக்கதையை கொண்டதா இருக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.