சென்னையில், டீ கடை ஆரம்பித்த தல படத்தின் நாயகி..
தமிழில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் தல அஜித் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். அதில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாதவன் ஜோடியாக விக்ரம் வேதா படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
நேர் கொண்ட பார்வை படத்தின் மூலம் இவருக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது ஹிந்தியில் டாப்ஸி நடிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையின் நடித்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிகை என்பதை தாண்டி தொழில் துறையில் இறங்கியுள்ளார். தற்போது சென்னை வேளச்சேரியில் உள்ள pheonix mall வளாகத்தில் ‘பெர்சி’ என்ற பெயரில் டீ கடை (Cafe) ஆரம்பித்துள்ளார். இந்த செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டீ கடை ஆரம்பித்ததற்கு பல சகா நடிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இனி பட டிஸ்கஷன் சூடான டீ-யோடு நடக்கலாமோ என்னவோ !!