சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை!
மகாராஷ்ட்ராவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவன், சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரது உடல் விடுதி அறையில் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது தற்கொலை எனவும், மேலும் மாணவர் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
மாணவரது மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ”மாணவரின் மரணத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிவித்துள்ளனர்.
”எங்கள் பல்கலைக்கழகம் ஒரு நல்ல மாணவனை இழந்து விட்டது, இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, பொலிஸார் விசாரணை செய்து வருகிறார்கள். பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது” என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.
“நிறுவனம் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது மற்றும் இறந்த மாணவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த கடினமான தருணத்தில் மாணவரின் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு நிறுவனம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
“ஐஐடி மெட்ராஸ் முன்கூட்டியே கண்டறிந்து உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாணவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்,” என்று ஐஐடி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஐஐடி-மெட்ராஸ் பிஎச்டி மாணவர் 32 வயதான தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.
இதற்கு முன், மார்ச் மாதம், அதே வளாகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான அவர் ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார்.
பிப்ரவரியில், ஐஐடி-மெட்ராஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.