சென்னை மக்களே உஷார்!! பிரியாணியில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சி கலப்படம்…
சென்னையில் சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் சேர்ந்து பூனை இறைச்சி விற்பனை செய்யப்படுவாக தகவல் வெளியாகியுள்ளது.
பூனை இறைச்சி
சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.
நரிக்குறவர்கள்
அதன்படி சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள நரிக்குறவர் அவர்களது குடியிருப்புகளில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளது.
வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் திருடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்படி 11 பூனைகளை ஏழு கிணறு பொலிசாரின் உதவியோடு மீட்டு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீராணி கூறியதாவது
நான் மத்திய அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் சோதனை செய்து அங்கு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல கருப்பு பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவை திருடப்பட்ட செல்லப்பிராணிகள் ஆகும். இந்த செல்லப்பிராணிகளை இரவு நேரங்களில் வலைகளை பயன்படுத்தி பிடித்துள்ளனர்.
சென்னையில் பல பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஒரு பூனையை ரூ.1000-க்கு விற்றது கண்டுபிடிக்கப்படுகின்றது.
இதில் கருப்பு பூனைகளை பிடித்து அதன் ரத்தத்தையும் விற்பனை செய்து வருகின்றனர்
இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பூனைகள் மட்டுமல்லாது மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து, உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் சென்னை வாழ் மக்களை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.