சென்னை விமான நிலையத்தின் பெயரை எந்த விமான நிறுவனங்களும் ஏன் குறிப்பிடவில்லை ? -கோபத்தில் தயாநிதிமாறன் !!!

December 13, 2019 at 10:22 pm
pc

நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில், இந்திய விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிடும் போது, வெறும் “சென்னை விமான நிலையங்கள்” என்று மட்டும் குறிப்பிட்டதால், கோபமடைந்த திமுக எம்.பி தயாநிதிமாறன், சென்னையில் உள்ள விமான நிலையங்களின் பெயர்களை இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பிடத்தது ஏன் என கேள்வியை எழுப்பினார்.

இன்று சென்னையில் உள்ள காமராஜர் உள்நாட்டு விமான நிலையம், அண்ணா சர்வதேச விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களின் பெயர்களை இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ், ஜெட், கோ ஏர், ஏர் ஆசியா மற்றும் ஏர் விஸ்தாரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடாமல் வெறும் சென்னை விமான நிலையங்கள் என்று மட்டும் ஏன் கூறுகிறீர்கள். அப்படி குறிப்பிடுவதற்கு என்ன காரணம் என கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website