சொகுசு ஹோட்டல் பில்-ஐ தயாரிப்பாளர் தலையில் கட்டி எஸ்கேப் ஆன நடிகை !!
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “பட்டாஸ்” படத்தில் நடித்த நடிகை மெஹரீன் இவர் நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். நோட்டா படத்திலும் நடித்து இருந்தார்.
இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் இவர் அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். தனக்கு சரும பிரச்சனை இருப்பதாக கூறி, வர முடியாது என போனில் கூறிவிட்டார்.
மெஹரீன் பேச்சை கேட்டு கோபமான தயாரிப்பாளர் ‘நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நான் உங்கள் ஹோட்டல் பில் செட்டில் பண்ண மாட்டேன்’ என எரிச்சலோடு கூறியுள்ளார். இதனால் மெஹரீன் எதுவும் சொல்லாமல் ஹோட்டலை விட்டு சென்று விட்டார். பிறகு தயாரிப்பாளரிடம் ஹோட்டல் நிர்வாகம் பணத்தை பெற்றுள்ளார்கள். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தை திரும்பி பார்கவைத்துள்ளது. இந்த நடிகைக்கு இவ்வளவு திமிரா.. என பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.