ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று கூறியதால், ஆற்றில் வீசி குழந்தையை கொலைசெய்த தாய்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…
குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே சென்று வந்த நிலையில் குழந்தையைக் காணவில்லை என்று தாய் கதறி அழுதுள்ளார்.
புதரில் சடலமாக குழந்தை
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், ராசாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மகேஷ்வரன், லதா தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி பார்த்தபோது இரண்டாவது குழந்தை ராகுலைக் காணவில்லை என தாய் லதா கதறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை அக்கம் பக்கம் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பாலாற்று அருகே உள்ள புதர்ச்செடியில் குழந்தை ராகுல் சடலமாக இருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மூடநம்பிக்கையில் தாய் செய்த கொலை
குழந்தையின் சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து தாய் லதா மனக்கஷ்டத்தில் இருந்துள்ளாராம்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று கூறியதால், ஆற்றில் வீசி குழந்தையை கொலை செய்ததாக ஓப்புக்கொண்டுள்ளார்.