ஜேர்மனியில் பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன்!

August 25, 2023 at 9:48 pm
pc

ஜேர்மனியின் ஹார்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன் ஒருவரை நேரில் பார்த்துள்ளதாக சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜேர்மன் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபர் குடியிருந்து வருவதாக நம்பப்படுகிறது. அந்த மர்ம மனிதரின் புகைப்படத்தை இரு மலையேறும் பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்த நபர் ஒரு பாழடைந்த கோட்டையின் அடிவாரத்தில் நிர்வாணமாக உட்கார்ந்து ஒரு மர ஈட்டியைப் பிடித்திருப்பதைக் கண்டுள்ளனர். தொலை தூரத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட புகைப்படம் என்பதால், காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை.

இருப்பினும், அந்த மனிதன் தரையில் அமர்ந்து மணலில் விளையாடுவது போல் காணப்படுகிறார். 31 வயதான Gina Weiss மற்றும் அவரது நண்பர் 38 வயதான Tobi ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் Blankenburg பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ஒரு மணல் குகைகள் அருகே சென்றபோது அந்த மர்ம நபரை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர். மரத்தாலான ஈட்டியுடன் கற்கால நபர் போல நிர்வாண கோலத்தில் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும் எனவும், சுமார் 10 நிமிடங்கள் அவர் அந்த பகுதியில் காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் Blankenburg பகுதியில் இதுபோன்ற மர்ம நபர்கள் தென்படுவது இது முதன்முறை அல்ல எனவும், கடந்த 5 வருடங்களில் பலர் இப்படியான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் அப்படியான நபர் அந்த வனப்பகுதியில் இல்லை எனவும், மக்களை ஏமாற்ற இதுபோன்ற புகைப்பட வதந்திகள் பரவலாக வெளியிடப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேர்மனியின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இதனாலையே மக்கள் இதுபோன்ற கட்டுக்கதைகளை உருவாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website