“டியூசனுக்கு வராததால் ஆசிரியர் செய்த மட்டமான செயல் ” 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!!
உசிலம்பட்டியில் தனது டியூசனுக்கு வராமல் வேறொரு டியூசனுக்கு சென்றதால் மாணவனை டார்ச்சர் செய்த ஆசிரியர், மனமுடைந்த மாணவன் தற்கொலை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொட்டப்பநாயக்கன் எனும் ஊரை சேர்ந்த சிங்கம் மற்றும் அமுதா தம்பதியினருக்கு பாலாஜி எனும் மகன் உள்ளார். இவர் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவரது பள்ளி கணித ஆசிரியர் தனியாக டியூசன் சென்டர் வைத்து நடத்திவந்துள்ளார் .கணித ஆசிரியரான ரவி என்பவரிடம் பாலாஜி 9ம் வகுப்பு படிக்கும் போது டியூசன் சென்று படித்துள்ளார். பின்னர் 10 ம் வகுப்பு சென்றவுடன் அவருடைய டியூசன் சென்டருக்கு செல்லாமல் மற்றொரு டியூசன் சென்டருக்கு சென்று படித்துள்ளான் .
இதனால் மாணவன் பாலாஜி மீது ஆசிரியர் கடும் கோபத்தில் இருந்ததாகவும் ,இதனைக் காரணம் காட்டி மாணவனை அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தை கூறி அடித்து துன்புறுத்தியதாகவும் அவனை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்புவோம் எனவும் பாலாஜியின் பெற்றோர் தெரிவித்தனர் . இதேபோல கடந்த 6 மாதங்களாக பிரச்சனை பள்ளியில் தொடர்ந்துகொண்டே இருந்துள்ளது . இந்நிலையில் சனிக்கிழமை அன்று வழக்கம் போல பாலாஜி பள்ளிக்கு சென்றுள்ளான் . அன்றும் ஆசிரியர் ரவி வகுப்பறையில் பாலாஜியை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளி மடிந்து வீட்டிற்கு வந்ததும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் தோட்டத்திற்கு சென்றுள்ளனர் . எனவே வீட்டில் தனியாக இருந்த பாலாஜி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான் .மகனின் சடலத்தை கண்ட பெற்றோர்கள் மனமுடைந்துள்ளனர் .
தகவலறிந்து வந்த போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர் .மேலும் பாலாஜி எழுதிவைத்திருந்த ஒரு கடிதத்தையும் கண்டுபிடித்தனர் .அந்த கடிதத்தில் “தன்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணம், அவன் கொடுமை தாங்காமல் தான் இம்முடிவை எடுத்தேன். அவனுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் .அனைவருக்கும் இறுதிவணக்கம் ” என குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் . இதன்பேரில் மாணவன் படித்த பள்ளியை தொடர்புகொண்ட போது பள்ளி நிர்வாகம் பேச மறுத்துள்ளது . அதனால் டியூசன் ஆசிரியர் ரவியை போலீசார் தேடிவருகின்றனர் .மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியரால், இந்த மாணவனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது மிகவும் வேதனையளிக்கிறது.