டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை கொலை செய்த மாமியார்..!
தெலுங்கானா மாநிலத்தில் டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பர்சானா. இவரது மருமகள் அஜ்மிரி பேகம். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை பர்சானா டீ போட்டு தரும்படி மருமகள் அஜ்மிரியிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பர்சானா துணியால் தனது மருமகள் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவாலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஜ்மிரி பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாமியார் பர்சானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.