தந்தையின் கள்ளக்காதலியை நண்பர்களுடன் சேர்ந்து’.. 17 வயது சிறுவன் செய்த கொடூரம்.. “வெளிவந்த பகீர் தகவல்”..?
தஞ்சாவூர் அடுத்த பட்டுக்கோட்டை மதுக்கூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்த கணவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்து வந்த 47 வயதுடைய ஒரு பெண்மணிக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி, தகராறு ஏற்பட்டது தந்தையின் கள்ள தொடர்பினால் ஆத்திரமடைந்த சிறுவன், தந்தையுடன் தவறாக பழகி வந்தப் பெண் மீது கோபத்தில் இருந்துள்ளான். சம்பவத்தன்று தனது நண்பருடன், தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளான்.
அப்பொழுது தந்தையுடனான இருக்கும் தொடர்பை கைவிடும்படி அந்த பெண்ணிடம் சிறுவன் கேட்டுள்ளான். இதில் அவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிறுவன், நண்பருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை ஆயுதங்களால் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். பின்னர் பதறிப்போன சிறுவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்க்கும் போது ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்த பெண்ணை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.