தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனைவி! அதிர்ச்சி தகவல் …

April 6, 2022 at 2:14 pm
pc

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவர் அதே பகுதியில் பாம்பு பிடிப்பது மற்றும் கால்நடைகளுக்கு பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி. தையல் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் மற்றும் நட்சத்திரா என இரு குழந்தைகள் உள்ளனர்.

வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் நேற்று இரவும் வினோத்குமார் குடித்துவிட்டு வந்து எனது மனைவி மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முத்திப்போகவே ஆத்திரமடைந்த மகாலட்சுமி தான் தையலுக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து கணவரை நெஞ்சில் ஆழமாக குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தால் வினோத்குமார் கூச்சலிட்டு கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த வினோத்குமாரை நீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வினோத்குமார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி உடனடியாக வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சரண் அடைந்தார். தற்போது காவல்துறையினர் மகாலட்சுமி கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகமடைந்த கணவரை ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website