தன் ஆறு மாத பிள்ளையை எரித்துக்கொன்ற தாய்! பின்னர் அவருக்கு நேர்ந்த நிலை
தமிழக மாவட்டம் சிவகங்கையில் பெண்ணொருவர் தனது 6 மாத பிள்ளையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அழுதுகொண்டே இருந்த பிள்ளை
சிவகங்கை மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்தவர் அழகு மீனா (34). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் (38) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு வேதாஸ்ரீ என்ற 6 மாத பெண் பிள்ளை இருந்தது. முருகன் நிலங்களுக்கு கம்பி வேலி அமைக்கும் பணியை செய்து வருகிறார்.
கடந்த 4 நாட்களாக வேதாஸ்ரீ அழுதுகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. அழகுமீனா தனது பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் பலனில்லை என தெரிகிறது.
பரிதாப மரணம்
இந்த நிலையில், நேற்று அதிகாலை மகள் வேதாஸ்ரீயை அழைத்துக் கொண்டு அழகுமீனா கண்மாய் பகுதிக்கு சென்றார். அங்கு தன் மீதும், பிள்ளை மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேதாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தது.
அழகு மீனா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற பிள்ளை மீது பெட்ரோல் ஊற்றி, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.