தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு.., இனி வேலை வாய்ப்புகளுக்கு தமிழக அரசின் புது job portal..!!

தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தினமும் ஆன்லைனில் வேலைகள் தேடி வருகின்றனர். monster, shine, Naukri போன்ற இணையதளங்களில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் போடுவது வழக்கம்.
தற்போது தமிழக அரசு வேலை வாய்ப்புக்காக புதிய போர்டல் Portal ஒன்றை தொடங்கியுள்ளது. இதில் வேலைவாய்ப்பு விஷயங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த சிறப்பு ஏற்பாடு பல இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் என தமிழக அரசு இந்த ஏற்பாடை செய்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப் பணியிடங்களை தளத்தில் பதிவேற்றி தகுதியான நபர்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் தொடங்கப்பட்டது.
tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இணைய தள முகவரி: tnprivatejobs.tn.gov.in