தமிழக பாஜக தலைவர் தம்பி அண்ணாமலைக்கு நன்றி.. கமல்ஹாசன் வைரல் பதிவு..!
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’அமரன்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து பாராட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
’அமரன்’ படம் குறித்து அண்ணாமலை கூறிய போது, ‘அமரன்’ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ராணுவ வீரர்கள் நேர்மை, வீரதீரம், தைரியம் போன்ற முக்கிய அம்சங்கள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பதற்காக ஒரு வீரர் தன்னலமின்றி தியாகம் செய்யும் போது, அந்தத் தியாகத்தின் பின்னால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு பெரியது என்பதும் நெகிழ்வாக விவரிக்கப்பட்டுள்ளது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல தலைமுறைகளுக்கும் ஊக்கமூட்டும் ஒரு கதையாகும். இந்தப் படத்தை உருவாக்கிய கமல்ஹாசனுக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு தோன்றுவது, இந்தப் படம் நாட்டுக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கு மற்றும் அவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஒரு உண்மையான மரியாதையும் அஞ்சலியும் ஆகும்.
அண்ணாமலையின் இந்த பதிவுக்கு பதில் கூறிய கமல்ஹாசன் கூறியபோது, ‘தமிழக பாஜக தலைவர், தம்பி அண்ணாமலை அவர்கள் அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.