தமிழக வெற்றி கழகத்தின் மாநாடிற்கு சென்ற தொண்டர்கள் விபத்தில் சிக்கி பலி…
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு தொண்டர்கள் விபத்தில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், இன்று கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்ததால் மாநாட்டு திடல் பரபரப்பாக உள்ளதோடு, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் மணல் லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, மணல் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதால், தடுமாறி விழுந்த இளைஞர்கள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது என விஜய் அறிவுறுத்தியிருந்த போதிலும், அதைக் மதிக்காமல் வந்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது