தமிழ்நாடு அரசின் லோகோ.. ரேஸ்க்கு தயாராகும் அஜித்.. குவியும் தமிழக ரசிகர்களின் வாழ்த்து!!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ உடன் நடிகர் அஜித் கார் ரேஸுக்கு தயாராகும் கார் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகர் அஜித் தற்போது “விடாமுயற்சி” மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. வரும் பொங்கல் தினத்தில் ’குட் பேட் அக்லி’ திரைப்படமும், அதனை அடுத்து சில மாதங்களில் ’விடாமுயற்சி’ படமும் வெளியாக இருக்கின்றன.
இந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐரோப்பியாவில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர் போர்ஷே 911 GT3 RS என்ற காரை தயார் நிலையில் வைத்துள்ளார்.
அந்தக் காரில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவும் உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அஜித் பெயரில் ஒரு அணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணி அஜித் தலைமையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.