தல ரசிகர்களுக்கு ஒரு மரண மாஸ் அப்டேட்…
தென்னிந்தியா சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான வசூல் சக்கரவர்த்தி நடிகர் அஜித் தற்போது போனி கபூர் பிரமாண்டமாக தயாரிக்கும், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். விநாயகர் ஹதூர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் அஜித்துக்கு விபத்தில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தனது மேனேஜர் வீட்டு விசேஷத்தில் செம்ம மாஸாக ஏற்றி கொடுத்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார் நம்ம தல, இந்நிலையில் படத்தை பற்றி படக்குழு இன்னும் ஒரு அப்டேட்டை கூட வெளியிடாததால், சமீபத்தில் ரசிகர்கள் வி வாண்ட் வலிமை பர்ஸ்ட் லுக் என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் அளித்துள்ள பேட்டியில் “வலிமை” படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரலில் ரிலீசாகும் என கூறியுள்ளார். மேலும் செகண்ட் லுக் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிகிறது. விஜய் ரஜினி என அவர்களின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் இந்த தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.