தளபதினு சொல்றதா!அடுத்த முதல்வர்னு சொல்றதா!!தவெக மாநாட்டில் 2 பெண் தலைவர்களின் கட்-அவுட்டுகள்..
தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மாநாட்டு திடலில் ஏற்கனவே பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு பெண் தலைவர்களின் கட்டவுட்கள், அதாவது வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அப்துல் கலாம் உள்ளிட்ட சில தலைவர்களின் கட்டவுட்கள் இன்னும் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்த செய்திகளை பார்க்கும் அரசியல் விமர்சகர்கள் “ஆரம்பமே அட்டகாசம்” என்றும், தமிழகத்தில் இந்த கட்சி ஒரு வித்தியாசமான கட்சியாக தெரிகிறது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
முதல் மாநாட்டிலேயே தமிழக மக்களின் கவனத்தை பெரும் வகையில் தமிழக வெற்றி கழகத்தினர் நடத்திய நடவடிக்கையால், அடுத்தடுத்து என்னென்ன திருப்புமுனைகளை தமிழக அரசியலில் இந்த கட்சி ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.