தவெக மாநாடு… கொள்கை பாடலில் இடம் பெற்ற விஜய் குரல்… உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி வைத்தார். மேலும் கடந்த மாதம் கட்சியின் கொடி மற்றும் கொள்கை விளக்க பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் தவெக முதல் மாநில மாநாடு நடத்த முடிவு செய்து பல்வேறு இடங்களில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது, ஆனால் இறுதியாக விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் அனுமதி பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது.
‘ஒரு கட்டத்தில் போலீசார் அனுமதி வழங்கிய நிலையில் மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று மாலை மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதலே தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வி.சாலையை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள்.
மாலை 4 மணி அளவில் விஜய் மாநாடு மேடைக்கு வருகை தந்த பிறகு மாநாடு பந்தல் நடுவே அமைக்கப்பட்ட மேடையில் நடந்து சென்ற விஜய் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டை தனது கழுத்தில் போட்டுக் கொண்டார் அதன் பிறகு விஜய் மாநாடு மேடையில் அமைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் திராவிட இயக்க தலைவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ உ சி மற்றும் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.