திண்டுக்கல்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த கொடூரன்கள்!

திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 4 சிறார்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைதுசெய்தனர்.
திண்டுக்கல்லில் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரில் வசிக்கும் 8 வயது மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயதுகொண்ட 4 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூற திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்ரோர் புகார் அளித்தனர்.
அதன்படி, போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்த போலீஸார், அவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.