திருமணமாகி 5மாதத்தில் புதுப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் !
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (22). கார் டிரைவர் . இவரது மனைவி மாரிசெல்வி (21). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிசெல்வி கோபித்துக் கொண்டு தாளமுத்துநகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் மாரிசெல்வியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் சிலருடன் சென்ற பொன்ராஜ் , திடீரென மாரிசெல்வியை தாக்கிவிட்டு அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். அதை தடுக்க முயன்ற மாரிசெல்வியின் தாய் மாரியம்மாளுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.