திருமணமான 4 மாதங்களில் 21 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! கதறும் தாய்
தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த இளம்பெண்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பாட்டியைச் சேர்ந்தவர் நித்யா. 21 வயதான இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் (23) என்பவரை காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் நித்யா தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
காலையில் எழுந்த தினேஷ் மனைவி சடலமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பிரேத பரிசோதனை
பின்னர் தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நித்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தினேஷிற்கும், நித்யாவிற்கும் இடையே கடந்த ஒரு மாதமாக தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் நித்யா இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.