“தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… திடீரென கடித்து குதறிய 5 தெரு நாய்கள்!

திருப்பூர் சாலையில் சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் – தாராபுரம் சாலை, தெற்குதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகரான இவரது ஆறு வயது மகன் பிரகதீஸ், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பிரகதீஸ் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென வந்து பிரகதீஸை கடித்துக் குதறியது.
உடனே அருகில் இருந்த நபர் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்ததால் சிறுவன் பிரகதீஸ் உயிர் தப்பினான். பிறகு சிறுவன் பிரகதீஸை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரென தெருநாய்கள் கடித்து குதறியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.