தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி!
பொதுவாக உடலில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய காய்கறி வகைகளுள் குடைமிளகாய் முக்கிய இடம் வகிக்கின்றது. குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகளவில் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.
புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுவோருக்கும் குடை மிளகாய் சிறந்த தீர்வு கொடுக்கும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய குடைமிளகாயை வைத்து நாவூரும் சுவையில் வெறும் பத்தே நிமிடங்களில் எவ்வாறு குடைமிளகாய் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்-1 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு-1 தே.கரண்டி
கடலைப் பருப்பு-1 தே.கரண்டி
காஷ்மீரி சிவப்பு மிளகாய் -4
காய்ந்த மிளகாய்-3
நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
நறுக்கிய தக்காளி -1/2 கப்
குடைமிளகாய்-1(தோராயமாக துண்டுகளாக்கப்பட்டது)
உப்பு -தேவையான அளவு
தண்ணீர்- சிறிதளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் -1 தே.கரண்டி
கடுகு விதைகள்-½ தே.கரண்டி
உளுந்தம் பருப்பு -½ தே.கரண்டி
பெருங்காயம்-1 சிட்டிகை
கறிவேப்பிலை -சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வலையில் வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து குடைமிளகாயை சேர்த்து அது சுருங்கும் வரையில் நன்றாக வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிது உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றுடன் கறிவேப்பிலையை தூவி தாளித்து சட்னியின் மீது ஊற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த குடைமிளகாய் சட்னி தயார்.