தொலைக்காட்சி புகழ் DD-யின் பிங்க் பட்டாம்பூச்சி போஸ் !!
திவ்யதர்சினி புகழ் பெற்ற விஜய் டிவியின் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி. இவர் பல தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது கவுதம் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் துருவநட்சத்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சம்பத்தில் அவருடைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பிங்க் வண்ணம் புடவையில் ஸ்லீவ்லேஸ் போட்டு வண்ணத்து பாட்டாம்பூச்சி போல் போஸ் கொடுத்துள்ளார்.
திவ்யதர்சினி துள்ளலான நகைச்சுவையான பேச்சினால் பிரபலமானவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
2014 இல் இவருக்கும் தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனிற்கும் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2017-ல் சில மனக்கசப்புகளால் இவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.