தொழிலதிபரின் மனித நேயம்…அள்ளி அள்ளி கொடுத்த ரத்தன் டாடா: கதறும் ஊழியர்கள்…
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலங்கியுள்ளனர். எந்தவொரு தொழிலதிபதிருக்கும் இல்லாத அளவு ரத்தன் டாடாவை பொதுமக்கள் அனைவரும் நேசித்தனர். அந்தளவிற்கு இவர் இதயங்களை வென்றுள்ளார்.
நேற்றைய தினம் (அக்டோபர் 9) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த சமயத்தில் ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைதான்’ என தனது தெரிவித்து இருந்தார் ரத்தன் டாடா.
இந்நிலையில் தான் நேற்று இரவு காலமானார் ரத்தன் டாடா. அவருக்கு வயது 86. அவரின் மறைவை தொடர்ந்து ரத்தன் டாடாவின் உதவும் குணம், மனித நேயம் குறித்து அனைவரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு கலங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் ரத்தன் டாடா நன்கொடைகளை அள்ளி கொடுத்துள்ளார். டாடா நிறுவனம் சார்பாக ஏராளமான அறக்கட்டளைகளுக்கு கோடிக்கணக்கான நன்கொடைகள் வாரி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ஏராளமானவர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவில் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாய துறைகளுக்கு ரத்தன் டாடா நன்கொடைகளை வழங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் வாயிலாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் கல்வி, மருத்துவம், விவசாயத்துக்கு தேவையான உதவிகளை செய்து தந்துள்ளார் ரத்தன் டாடா.
தான் படித்த கார்னெல் பல்கலைக்கழத்தில் இந்தியர்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ரத்தன் டாடாவிற்கு அதிகமாகவே இருந்தது. தனது சொந்த பணத்தை கார்னெல் பல்கலைழக்கத்துக்கு வழங்கி பலரின் மேல்படிப்புக்கு உதவி செய்தார். குறிப்பாக கொரோனா சமயத்தில் ரூ.500 நன்கொடையாக வழங்கி வியக்க வைத்தார் ரத்தன் டாடா.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மறுவாழ்வுக்காக ‘தாஜ் பொது சேவை நல அறக்கட்டளையை துவங்கி உதவினார். இவ்வாறு பல்வேறு தருணங்களில் சமூகத்திற்கு தனது பங்களிப்பை கொடுப்பதில் ரத்தன் டாடா தவறியதே இல்லை. இதனாலே தொழிலதிபர் என்பதை மனிதநேயமிக்க மனிதராக அடையாளப் படுத்தப்படுகிறார். இவ்வுலகை விட்டு மறைந்தாலும் சமூகத்தின் மீது கொண்டிருந்த அன்பால், அக்கறையால் எப்போதும் ரத்தன் டாடா நினைவு கூறப்படுவார்.