நடிகை குஷ்பூவிற்கு அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது !!
இயக்குனர் சுந்தர்.சி மனைவியும் நடிகையுமான குஷ்பூவிற்கு அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது . இந்த செய்தியை குஷ்பு சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற குஷ்புவுக்குத் திரையுலகினரும் நண்பர்களும் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.
1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருடம் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். குஷ்பூவிற்காக சக திரை துறை நண்பர்கள் வஸ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.