நடிகை சமந்தா மறுப்பு! படத்தில் இருந்து நான் விலகவில்லை..
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார்.
மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார். குறிப்பாக விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்.தி.ஆர் போன்ற பல நட்சத்திரங்களோடு இணைந்த நடித்தார்.
சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த ஜானு படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை அடைந்தது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஓட வில்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் இருந்து இவர் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்.
தற்போது இதனை குறித்து நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான் இந்த படத்தில் நான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் பணிபுரிவது எனக்கு நன்றாக தான் இருக்கிறது நான் இந்த படத்தில் இருந்து விலக வில்லை என்று தற்போது தெரிவித்துள்ளாராம்.