நடிகை மீனாவின் கணவர் மரணம்!! குஷ்புவின் உருக்கமான இரங்கல் பதிவு..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் மீனா, கண்ணழகி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் மீனா எப்போதும் சிரித்த முகத்துடனேயே காணப்படுவார்.
2009ம் ஆண்டு திருமணம் முடிந்த கையோடு பெங்களூருவின் செட்டிலான மீனா, சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
கணவன், மகள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் அன்புடன் கவனித்து வந்த மீனா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது துணை நடிகை, அண்ணி, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார், இவரது மகள் நைனிகாவும் விஜய்யுடன் சேர்ந்து தெறி படத்தில் நடித்து இருக்கிறார்
இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நுரையீரல் பாதிப்பும் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணம் அவரது குடும்பத்தினரையும், ஒட்டு மொத்த சினிமா நட்சத்திரங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மீனாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மோசமான செய்தியுடன் காலை எழுந்திருக்கிறேன்.நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது.
நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.