நாடு திரும்பும் விராட் கோலி: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ருதுராஜ்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் முன்னணி வீரர் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார்.
டெஸ்ட் போட்டி
இந்தியா- தென்னாப்பிரிக்க இடையிலான டி20 தொடர் டிராவிலும், ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஸ்ரீகர் பரத், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.
நாடு திரும்பும் விராட் கோலி
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். காரணம் தெளிவாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் டிசம்பர் 26ம் திகதி மீண்டும் தென்னாப்பிரிக்கா வந்து இறங்குவார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க தொடரில் மூன்று பார்மெட் போட்டிகளிலும் களமிறங்கிய ருதுராஜ் தன்னுடைய விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, மேலும் அவருக்கான மாற்று வீரரை நாளை பிசிசிஐ அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.