நானும் எனது மனைவியும் பிரிகிறோம்: 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெற்ற சீனு ராமசாமி

December 12, 2024 at 11:35 am
pc

நானும் எனது மனைவியும் பிரிகிறோம் என 17 வருட திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2007 ஆம் ஆண்டு “கூடல் நகர்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி, அதன் பிறகு “தென்மேற்கு பருவக்காற்று”, “நீர் பறவை”, “இடம் பொருள் ஏவல்”, “தர்மதுரை”, “கண்ணான கண்ணே”, “மாமனிதன்”, “கோழிப்பண்ணை செல்லத்துரை” போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனா என்பவரை பிரிவதாக தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடை பெறுகிறோம்.

இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website