நான் சொன்னதை.. நீங்க டிரைலர்ல பார்ப்பீங்க !! ட்ரைலர் தேதி அறிவிப்பும் வெளியானது !!
நேற்று மாலை மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக அரங்கேறியது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ், மாளவிகா மோகன் மற்றும் படத்தில் பணிபுரிந்தவர்கள் பங்கேற்றனர். மேடையில் இயக்குனர லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ட்ரைலர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார்.
“இந்த படத்திற்கு முதலில் வாத்தி என்று தான் பெயர் வைக்க யோசித்தேன். ஆனால் அது பின்னர் மாஸ்டர் என மாற்றப்பட்டது. கதைக்கு இத்தனை பாடல்கள் தேவைப்பட்டது” எனவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் படம் விஜய்யை வேறு ஒரு கோணத்தில் காட்டும் என கூறியுள்ளார் லோகேஷ். மேலும் நான் கூறியதை படத்தின் ட்ரைலரில் பார்ப்பீங்க என இயக்குனர் கூறினார். மார்ச் 22ம் தேதி ட்ரைலர் வெளியாகும் என அறிவித்தார்,
தற்போது வெளிவந்துள்ள மூன்று போஸ்டர்கள் பற்றி பேசிய லோகேஷ், “முதல் போஸ்டர் ஹீரோ அறிமுக சீன், இரண்டாவது போஸ்டர் இடைவேளையில் வருவது, மூன்றாவது போஸ்டர் கிளைமாக்ஸில் வருவது” என கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் பிளாக் புஸ்ட்டெர் நிச்சயம் என் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.