நான் பாஜகவுக்கு செல்லவில்லை.., நான் சொந்த சிந்தனை கொண்ட தனிநபர் !!

நடிகை குஷ்பூ சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை பற்றி பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பூ கட்சித் தலைமை என்ன கூறினாலும் தலையாட்டுபவர் நான் இல்லை என தைரியமாக கூறினார். மேலும் காங்கிரஸ், மத்திய அரசின் கல்விக் கொள்கையில் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஏற்க மறுத்ததாக பரவலாக பேசப்பட்டது.
மேலும் இது குறித்து நடிகை குஷ்பு அனைத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு தனி நபராக நான் எடுத்துள்ள நிலைப்பாட்டை நான் தெரிவித்தேன் என குஷ்பூ பதிவிட்டுள்ளார். குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது.
அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ போல் இருப்பதை விட உண்மையை பேசுகிறேன். நான் பாஜகவுக்கு செல்லவில்லை, என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன்,” என தனது நிலைப்பாட்டை பதிவிட்டுள்ளார்.