நிலைமை அறியாத முட்டாள் மக்களின் செயல், 144 தடையை மீறி மஞ்சுவிரட்டு – காளை மூட்டி படுகாயமடைந்த காவலர்
தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நடைமுறையில் இருந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி கிராமம் கீழக்கோட்டை பகுதியில் 06.04.2020 தேதியன்று அரசு அனுமதியின்றி ஊர் மக்கள் சிலர் ஒன்று கூடி மஞ்சுவிரட்டு நடத்தினர். மக்கள் தங்கள் களைகளை கொண்டு கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர்.
இதை பற்றி காவல் துறைக்கு தகவல் வந்ததையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் கூடியிருந்த மக்களை கலைத்தனர். அப்போது அங்கிருந்த காளை முட்டியதில் காவலர் திரு. கனகராஜ் அவர்கள் பாடுகாயம் அடைந்தார்.
எங்கள் உயிரையும் பொருட்படுத்தாது காவல் பணி புரிகிறோம் நாங்கள் இந்த நிலையறிந்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியடைய வீட்டிலே இருங்கள் நீங்கள் என காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.