நெஞ்சு வலியுடன் பஸ்சை ஓட்டி சென்று பயணிகளை இறக்கி விட்டு டிரைவர் மரணம்!

April 11, 2023 at 7:47 pm
pc

குஜராத்தில், மாரடைப்பு ஏற்பட்டபோதும், 15 கி.மீ. பஸ்சை ஓட்டி சென்று பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டு, விட்டு டிரைவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. 

குஜராத் மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றியவர் பர்மால் அஹிர் (வயது 40). சோம்நாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்று கிழமை இரவில் 8.30 மணியளவில் ஆஹிர், பஸ்சை எடுத்து உள்ளார். 

அந்த பஸ்சில் உள்ள பயணிகள் அனைவரையும் ராதன்பூர் நகர் வரை சென்று இறக்கி விட வேண்டும். இதற்காக நேற்று காலை 7.05 மணியளவில் இலக்கை சென்று அடைய வேண்டும்.

எனினும், ராதன்பூரில் இருந்து 15 கி.மீ. தொலைவுக்கு முன்பு, வராஹி என்ற பகுதியில் நேற்று காலை, டீ சாப்பிடுவதற்காக சாலையோரம் டிரைவர் ஆஹிர் பஸ்சை நிறுத்தி உள்ளார். 

இதன்பின்பு மீண்டும் பஸ் புறப்பட்டது. இந்த நிலையில், திடீரென ஆஹிருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால், வேறெங்கும் நிற்காமல் வண்டியை தொடர்ந்து செலுத்தி உள்ளார்.

பஸ் டெப்போவுக்கு 15 நிமிடம் காலதாமதமுடன் வந்து சேர்ந்தது. எனினும், டிரைவர் ஆஹிர் பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்ட பின்னர், சீட்டிலேயே சரிந்து உள்ளார். 

இதனை கவனித்த கண்டக்டர் மற்றும் மற்றவர்கள் சேர்ந்து ராதன்பூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அவரை கொண்டு சென்று உள்ளனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறி உள்ளனர். பஸ் டிரைவர் ஆஹிர், தன்னை பற்றி கவலை கொள்ளாமல் பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சென்று இறக்கி விட்டு, விட்டு உயிரிழந்தது அறிந்து மற்ற பயணிகள் சோகமடைந்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website