”நோ” சொன்ன ரவுடி பேபி ..அச்சோ ! என்ன ஆச்சு ,நம்ப மலர் டீச்சர்க்கு..? ஒரு கோடி ரூபாய் தந்தாலும் அதுக்கு மட்டும் ”நோ ” ? .. ”நோ மீன்ஸ் நோ” ..????
ஆடை விளம்பரங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய விளம்பரங்களில் நடிக்க சாய் பல்லவி கேட்டதற்கு ஸ்ட்ரெயிட் நோ சொல்லிவிட்டார் .
2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் “பிரேமம்”. இது மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் மிக பெரிய வரவேற்பு பெற்றது . பெண்ணுக்கு பெண்ணே ,பேராசை கொள்ளும் பேரழகு படைத்த பேரழகி , நம்ப ”சாய் பல்லவி” . நடிக்க வந்த முதல் படத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
2015ம் ஆண்டு பிரேமம் படத்தில் தொடங்கிய இவரது பயணம் மேலும் பல வெற்றி படங்களை பல மொழிகளில் தந்துள்ளது .தனக்கேன சில கொள்கைகளை வகுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க சம்மதிக்கிறார். கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறேன் என தயாரிப்பாளர்கள் ஆசை வார்த்தை கூறினாலும், ஸ்கிரிப்ட் கொடுங்க படிச்சிட்டு சொல்றேன் என கறாராக துரத்தி விடுகிறார் சாய் பல்லவி.இந்நிலையில், ஆடை விளம்பரங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய விளம்பரங்களில் நடிக்க சாய் பல்லவி கேட்டதற்கு ஸ்ட்ரெயிட் நோ சொல்லிவிட்டார் .
இதற்கு முன்னதாக அழகு க்ரீம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும் சாய் பல்லவியை கோடிகளில் வளைக்க பார்த்து மண்ணைக் கவ்வியது. 2 கோடி கூட கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்டது ,வெள்ளை தான் அழகு என்பதை ஏற்க முடியாது என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தாராம் நம்ப சாய் பல்லவி .